News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியாக உள்ள ‘குய்கோ’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

நடிகர்கள் யோகிபாபு, விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘குய்கோ’. இத்திரைப்படத்தை இயக்குனர் அருள்செழியன் இயக்கியுள்ள நிலையில், ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ளது. நாளை மறுநாள் (நவ.24) இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (நவ.22) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் நடிகர் விதார்த், நடிகை வினோதினி வித்யநாதன், இளவரசு, பிரியங்கா, முத்துக்குமார்,  உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள ‘குய்கோ’ ரூ.5 கோடி செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link