Share via:
கடந்த நாடாளுமன்றத்
தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்த பிரேமலதாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்
கொடுக்கப்பட்டது. ஆனால், அடுத்து வரயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில்
தன்னுடைய கட்சி இருக்காது என்பதை சூசகமாக கவர்னர் டீ பார்ட்டியில் தெரிவித்திருக்கிறார்
பிரேமலதா.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம்,
டிடிவி தினகரன், சசிகலா ஆகியவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் வேண்டுகோளாக
இருந்துவருகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்பதால் பா.ஜ.க. புதிய கூட்டணியை
ஏற்படுத்தி தனித்து நின்றது.
மத்தியில் பா.ஜ.க.
ஆட்சிக்கு வந்துவிட்டதால் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வில் இப்போது இருக்கும்
பா.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் அப்படியே தொடரும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த
நிலையில் கவர்னர் நடத்திய டீ பார்ட்டியில் பா.ஜ.க. கூட்டணித் தலைவர்களிடம் மட்டுமே
நெருக்கம் காட்டியதும், அவர்களுடன் மட்டும் பேசியதும் அ.தி.மு.க.வினரை கண் சிவக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் மும்முனைப்
போட்டி நடக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதால்
மத்தியில் ஆளும் பா.ஜ.க. பக்கம் சாய்வதற்கு இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து தே.மு.தி.க.
நிர்வாகிகளிடம் கேட்கையில், ‘’மரியாதை நிமித்தமாக பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளிடம் நெருக்கம்
காட்டினார்கள். சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்வதற்கு இன்னமும் அதிக காலம்
இருக்கிறது. அதேநேரம், இப்படி நெருக்கம் காட்டினால் எடப்பாடி பழனிசாமியிடம் அதிக சீட்டும்
கூடுதல் நோட்டும் வாங்க முடியும் என்பதும் பிரேமலதாவின் கணக்கு’ என்கிறார்கள்.