Share via:
ஜிகே மூப்பனார் நிகழ்வில் நிர்மா சீதாராமன் வேண்டுகோளின் பேரில்
எல்.கே.சுதிஷ் கலந்துகொண்டார். இந்த விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தேமுதிக
சார்பில் பங்கேற்ற சுதிஷை மரியாதை நிமித்தம் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் என்றும் பணம் கொடுத்து கூட்டத்திற்கு ஆள் பிடிக்கிறார்
என்றும் பிரேமலதா எகிறியிருக்கிறார்.
சென்னையில் தேமுதிக தென்சென்னை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘’அதிமுக-வுடன் 2024 நாடாளுமன்ற
தேர்தலில் கூட்டணி அமைத்தபோது 5 மக்களவை தொகுதிகளும், 1 மாநிலங்கவையும் ஒதுக்குவதாக
தெரிவித்தனர். ஆனால் அந்த சீட் நமக்கு கொடுக்கவில்லை. சீட் தருவதாக கூறி பழனிசாமி
நம்மை முதுகில் குத்திவிட்டார். முதல்வராக இருந்தவர், கட்சி தலைவராக இருக்கிறார்,
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என
நம்பினோம். ஆனால் ஏமாற்றிவிட்டா
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில்
தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை, அதேபோலதான் தேமுதிகவுடன் கூட்டணி
ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட வேண்டாம் என இபிஎஸ் கேட்டார். அதனால் நம்பிக்கையின்
பேரில் கையெழுத்திட்டோம். அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் கூட்டங்களுக்கு காசு
கொடுத்து ஆட்கள் வரவழைக்கப்படுகின்றனர் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அனைத்து கட்சி கூட்டங்களுக்கும் காசு கொடுத்துதான் மக்களை அழைத்து வருகின்றனர்.
இதில் தேமுதிக விதிவிலக்கு…’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
’’அண்ணா திமுக தயவில் ராஜ்ய சபா எம்.பி சீட்டை வாங்கிக் கொண்டு அண்ணா திமுகவிற்கு எதிராகவே
முதுகில் குத்திய துரோக வரலாறெல்லாம் நாங்கள் காணாததும் இல்லை அறியாததும் இல்லை! அடுத்த
ஆண்டு காலியாகப் போகும் ராஜ்ய சபா எம்.பி பதவி தேமுதிகவிற்கு தான் என அண்ணா திமுக நிச்சயமாகச்
சொல்லியும் பிரேமலதா தொடர்ந்து வார்த்தைகளை விடுகிறார் என்றால் திமுகவுடனான பிரேமலதா
மற்றும் அவரது தம்பி சுதீஷின் திரைமறைவு பேரத்தை எடப்பாடியார் சரியாக கணித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் வேண்டுமென்றே அண்ணாமலையை அழைத்து அருகே உட்கார வைத்தார், அதோடு பிரேமலதாவையும்
உசுப்பேற்றியுள்ளார்’’ என்கிறார்கள்.