Share via:
கடந்த 2021 தேர்தலில் கடைசி நேரத்தில் பிரேமலதாவை
எடப்பாடி பழனிசாமி கழட்டிவிட்டதற்கு பழி வாங்குவதற்காகவே திமுக கூட்டணியில் பிரேமலதா
இன்று ஐக்கியமாகியிருக்கிறார்.
தமிழக அரசியலில் புதிய நிகழ்வாக, திமுக கூட்டணியில்
தேமுதிக அதிகாரப்பூர்வமாக இன்று இணைந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த பலகட்ட
பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய இன்று அறிவாலயம் வந்துள்ளார்
பிரேமலதா
இந்த விஷயம் அமித்ஷா – எடப்பாடியின் மெகா
கூட்டணி கனவில் பேரிடி என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், * ஈஷா மையத்தில் நடந்த மகா சி ராத்திரி நிகழ்ச்சியில்
எஸ்.பி. வேலுமணியோடு இணைந்து பிரேமலதா கலந்து கொண்டதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக
வரும் கூட்டணி வலிமையாகும் என செய்திகள் பரவியது.
ஏனென்றால் 2011 தேர்தலில் தேமுதிக அதிமுக
உடன் கூட்டணி அமைத்ததால் அந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 2019, 2020களில் தேமுதிகவுக்கு
ராஜ்யசபா தருவதாக வாக்குறுதி தந்து தரவில்லை என்பது தேமுதிகவிடம் அதிருப்தியாக இருந்தது.
அதற்கு இப்போது பிரேமலதா எடப்பாடிக்கு பாடம் புகட்டியுள்ளார்.
*சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற-நாடாளுமன்ற
உறுப்பினர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்
என்ற முனைப்பில் இருக்கும் திமுக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தது 5000 முதல்
25,000 வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிகவை சேர்ப்பதன் மூலம் 200 தொகுதிகளை வெல்ல முடியும்
என கணக்கு போட்டு காய் நகர்த்தி வந்தது.
தற்போது தேமுதிகவின் வரவு திமுக கூட்டணிக்கு
கூடுதல் பலன். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்துவிட்டதாக கருதப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு திமுக தேர்தலில் தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்த மக்கள் நல கூட்டணியில்
இருந்த அத்தனை கட்சிகளும் தற்பொழுது திமுக கூட்டணியில் உள்ளது
