Share via:
![](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/73fb4225-9793-41a1-b50c-57dcdea6a046-1024x682.webp)
தே.மு.தி.க. தலைவர் முன்னிலையில், பிரேமலதா அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவேற்காட்டில் தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கலந்து கொண்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கலந்து கொள்ளும் முதல் செயற்குழு இதுவாகும். விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் கரவொலி எழுப்பியும், பெண் நிர்வாகிகள் கண்ணீர் விட்டு அழுதும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் பார்த்தசாரதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக இதுவரை தே.மு.தி.க. பொருளாளராக இருந்து வந்த பிரேமலதா, தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![37579672-7d28-441b-8e01-d582e63ce709](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/37579672-7d28-441b-8e01-d582e63ce709-1.webp)
![2c7e7d7c-2d3c-4703-97a4-061d7eee734a](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/2c7e7d7c-2d3c-4703-97a4-061d7eee734a.webp)
![899d886b-05e6-4795-85a9-22737262caee](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/899d886b-05e6-4795-85a9-22737262caee.webp)
![fb019f23-70a6-4727-863c-df0a0e2e7de6](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/fb019f23-70a6-4727-863c-df0a0e2e7de6.webp)
![73fb4225-9793-41a1-b50c-57dcdea6a046](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/73fb4225-9793-41a1-b50c-57dcdea6a046-1.webp)
![0accb1f9-5d4c-456a-8e4b-1159ede776f5](https://tamilnewsnow.com/wp-content/uploads/2023/12/0accb1f9-5d4c-456a-8e4b-1159ede776f5.webp)