News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு மெளன அஞ்சலி மற்றும் பேரணி நடைபெறும் என பிரேமலதாஅறிவிப்பு விடுத்ததையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்த நிலையில், பரபரப்பான சாலையில் பேரணிக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும் தொண்டர்கள் கலையாமல் அங்கேயே நின்றார்கள். அதோடு சாலை மறியலில் ஈடுபடும் வகையில் ரோட்டில் அமர்ந்தார்கள். இதையடுத்து பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் அங்கு வந்தார்கள்.

விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் வந்து சேர்ந்ததும் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர். தடை மீறி பேரணி நடத்தினால் கட்சியினரை கைது செய்வதற்குப் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரேமலதாவே கலந்துகொண்டதால் அவரை கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டவில்லை. எனவே, சிறிய சலசலப்புக்குப் பின்னர் போலீஸார் சூழ பேரணி அமைதியாக நடந்து முடிந்தது.

விஜயகாந்த் குரு பூஜையில் கலந்துகொண்ட பிரேமலதா கதறியழுதார். இந்த நேரத்தில் தி.மு.க. சார்பில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ‘’தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜயகாந்த் மீது கொண்டிருக்கும் மாறாத பற்றின் காரணமாக அமைச்சரவையில் இருந்து அரசு சார்பாக என்னை குரு பூஜையில் பங்கேற்க அனுப்பியுள்ளார். நான் விஜயகாந்தின் குடும்பத்தில் ஒருவனாக இந்த குரு பூஜையில் பங்கேற்றுள்ளேன். எனவே பேரணி அனுமதி மறுக்கப்பட்டதை பெரிய விஷயமாக்க வேண்டாம்.” என்று நகர்ந்தார்.

அடுத்தபடியாக சீமான் வந்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘’தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்…’’ என்று செய்தி அனுப்பியதோடு நிறுத்திக்கொண்டார்.

பனையூரில் போட்டோ வைத்து அஞ்சலி செலுத்துவாரா அல்லது நேரில் வருவாரா..?.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link