News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திமுக கூட்டணியில் இருந்து எப்படியாவது காங்கிரஸை வெளியேற்றி விஜய்யுடன் கொண்டு போக போட்ட திட்டம் போட்ட விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்திக்கு டெல்லி கதவை மூடிவிட்டது. இனியும் வெட்கம், மானம் இல்லாமல் காங்கிரஸில் தொடர்வார்களா அல்லது விஜய்யுடன் ஐக்கியமாவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்துப் பேசும் காங்கிரஸ் புள்ளிகள், ‘’தமிழக தேர்தல் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமை இன்று தமிழகத் தலைவர்களுடன் விரிவான சந்திப்பை நடத்தியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் மற்றும் கட்சிப் பொறுப்பாளர் ஆகியோர் 39 பேர்களை தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்தார்கள்.

அதன்பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் தமிழகத்தில் திமுக, புதுவையில் காங்கிரஸ் ஆட்சி. யாரும் தேவையில்லாமல் சமூகவலைதளங்களில் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். அதனால் காங்கிரஸ் டோட்டல் சரண்டர்’’ என்கிறார்கள்.

திமுகவினர் இதுகுறித்து, ‘’2006ஆம் ஆண்டு திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 96. காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36. காங்கிரசின் தயவில்தான் திமுக மாநிலத்தில் ஆட்சியிலேயே இருந்தது. இத்தோடு, பல மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தது காங்கிரசு. அப்போதே ஆட்சியில் காங்கிரசுக்கு திமுக பங்கு தரவில்லை. இப்போது காங்கிரசு தேய்மானம் அடைந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியிலும் இல்லை. வெறும் மூன்றே மாநிலத்தில்தான் ஆளுகையும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் காங்கிரசுக்கு செல்வாக்கு இல்லை; எதிர்காலம் இல்லை. எனவே, ஆட்சியில் பங்கு எனும் காங்கிரசின் கோரிக்கையை தற்போது திமுக ஏற்க 100 விழுக்காடு வாய்ப்பே இல்லை.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சொந்த கட்சிகாரர்களே தயங்கிய போது, இவர் தான் பிரதமர் வேட்பாளர்னு தாங்கி நிற்கும் சூழலில், ஆட்சியில் பங்கு என்று கேட்டால், பொங்கல் கூட கிடைப்பது கஷ்டம் தான்… என்னவொன்று, இது டெல்லிக்கும் தெரியும்… சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் அவர்களுக்கு இது அந்த சந்தர்ப்பம் இல்லை என்றும் தெரியும்…’’ என்கிறார்கள்.

இப்போது ஆப்பசைத்த குரங்கு போன்று பிரவீனும் மாணிக்கமும் மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். கட்சி மாறுவார்களா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link