Share via:
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை. எனவே அவரால்
வேஷ்டி கட்டுவதற்கு முடியவில்லை. பேண்ட் போட்டு கையை உள்ளே வைத்துக்கொண்டு அதனை மறைப்பதற்கு
முயற்சி செய்கிறார். அவர் உடனே பதவியை தகுதியுள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று திடீரென
குரல் எழுப்பியிருக்கிறார் பிரேமலதா.
இந்த பேச்சு உடன்பிறப்புகளுக்கு டென்ஷன் ஆக்கியுள்ளது. ஆகவே,
‘பொட்டி பிரேமலதா’ என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி பிரேமலதாவின் வாய்க்கொழுப்பு பேச்சுக்களை
தொடர்ந்து கடுமையாகப் பேசி வருகிறார்கள்.
சமூகவலைதளங்களில் பிரேமலதா குறித்து, ‘’நடக்க முடியாத,பேச முடியாத
நிலையில் இருந்த கேப்டனை குண்டு கட்டாக தூக்கி வந்து மேடையில் ஏற்றி ,சாயும் தலையை,சரியும்
உடலை நிமிர்த்தி பிடிக்க ஒருத்தனை நிற்க வைத்து தனக்கு மகுடம் சூட்டி கொண்ட மனச்சாட்சி
அற்ற நான்கு கால் பிராணி இவள்.. இவளெல்லாம் எங்க தலைவரை விமர்சனம் செய்கிறாள்
விஜயகாந்துக்கு அரசு மரியாதை கொடுத்து,தக்க பாதுகாப்பு கொடுத்து
முதல்வரும்,சின்னவரும். நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் பொட்டி பிரேமலதா இன்று எங்கள்
தலைவரின் உடல்நிலையை பற்றி விமர்சனம் செய்கிறாள்…’’ என்று ஒருமையில் திட்டுகிறார்கள்.
அதேபோல் விஜயகாந்த் பொண்டாட்டி பிரேமலதா, அவர் மச்சான் சுதீஷால்
தேமுதிக வீழ்ந்து போன கதையை எடுத்து உலவ விட்டிருக்கிறார்கள். அதன்படி, ‘’தேமுதிக
2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும்
தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில்
(கடையநல்லூர், திருநெல்வேலி) மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர்
விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க
தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்
2009 பாராளுமன்ற தேர்தலில்
தனித்து போட்டியிட்டு பூஜ்யம். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து
41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித்
தலைவரானார். 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுடன்
கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த நேரத்தில் தேமுதிகவிலிருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள்,
அதிமுக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை
சரிவைச் சந்தித்தது.
2014 பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில்
போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.அதன்
வாக்கு சதவிகிதமும் 6.1 அளவுக்கு குறைந்துபோனது. 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்
கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். 104 தொகுதியில் போட்டியிட்டு அத்தனை
தொகுதிகளிலும் டெபாசிட் போனது. 104 தொகுதிகளில் வாங்கிய வாக்குகள் 10,34,384.ப்சதவிகிதம்
2.4.
2019 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து
நான்கு தொகுதிகளில் நின்று வட்ட பூஜ்யம். வாக்கு சதவிகிதம்:2.19 2021 சட்டமன்ற தேர்தலில்
யாரும் கூட்டணிக்கு அழைக்காததால் டோக்கன் தினகரனுடன் பொட்டி பிரேமலதா கூட்டணி சேர்ந்து
60 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் போனது. வாங்கிய சதவிகிதம் 0.48
2024 பாராளுமன்ற தேர்தலில்
அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கேப்டனின் அனுதாபம்
அதிமுகவின் உழைப்புடன் விருதுநகரில் மட்டும் இரண்டாம் இடம் தேமுதிகவுக்கு.. பண ஆசையால்
கட்சியை படுகுழிக்குள் தள்ளிய பொட்டி பிரேமலதா என்று விமர்சனம் செய்துவருகிறார்கள்.