Share via:

பனையூர் வீட்டில்
வைத்து தந்தை பெரியார் படத்துக்கு நடிகர் விஜய் மாலை போட்ட நேரத்தில் பி.வி.சிந்து
திருமணத்தில் அஜித் குடும்பத்துடன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த
நேரத்தில் சங்கரன்கோவிலில் விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட
செய்திகள் வெளியாகின. அதை கண்டுகொள்ளாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் கொடூரத்துக்கு
ஸ்டாலின் அரசை குற்றம் சாட்டி விஜய் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, விஜய்க்குக்
குடும்பம் கிடையாது. அதனால் அவரும் அவரது ஆட்களும் பாலியல் குற்றவாளிகள் என்று சில
மீம்ஸ் வெளியாகின. அதேபோல், விஜய் கும்பிடும் பெரியார் படத்தில் நாயை வைத்து பூஜை செய்வது
போன்றும் ‘காலமானார் விஜய்’ என்று ஒரு போஸ்டர் போட்டு ஹேஸ்டேக்கையும் வைரலாக்கினார்கள்.
இதையடுத்து விஜய்
கட்சியின் நிர்வாகிகள் சமூகவலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுப்பது மட்டுமின்றி
காவல் நிலையத்திலும் போய் புகார் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் விஜய்யை கொக்கி குமார்
என்ற அஜித் ரசிகர் தொடர்ந்து கேலியும் கிண்டலும் செய்வதாக ஆங்காங்கே இருக்கும் காவல்
நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். அது மட்டுமின்றி, ‘காலமானார் பொட்ட அஜித்’ என்ற
ஹேஸ்டேக் போட்டு கடுமையாக டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
அரசியலுக்குள் வந்துவிட்டு
இப்போது எதற்கு அஜித் ரசிகர்களுடன் மோதவேண்டும் என்று விஜய் ரசிகர்களிடம் கேட்டதற்கு,
‘’அஜித் மேனேஜர் ஒருவர் சொல்லித்தான் விஜய் காலமானார் ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்டிங்
செய்திருக்கிறார்கள். அதனாலே புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.
அதேநேரம் அஜித் ரசிகர்களோ,
‘’விஜய் ரசிகர்களுக்கு அறிவே கிடையாது. தி.மு.க.வினரும் ரஜினி ரசிகர்களும் அவரை மீம்ஸ்
போட்டு கலாய்த்துவருகிறார்கள். அதுகூட தெரியாமல் அவர்கள் அஜித் ரசிகர்களுடன் மோதிக்கொண்டு
இருக்கிறார்கள். இவருக்கெல்லாம் அரசியல் சுட்டுப்போட்டாலும் வராது’’ என்று கிண்டல்
அடிக்கிறார்கள்.
கிறிஸ்துமஸில் தொடங்கிய
பஞ்சாயத்து ஒரு நாளைத் தாண்டியும் நீடிக்கிறது.