சமீபத்தில் கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் மாற்றுக் கட்சிக்குத் தாவ இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அவருக்கு மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தன்னைப் பற்றி அவதூறு பேசினால் சும்மா விட மாட்டேன் என்று எச்சரிக்கும் வகையில் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக நிஜமாகவே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள், ‘’எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் தஞ்சை, கோவை, சிவகங்கை உள்ளிட்டப் பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை டெண்டர் விதிகளை மீறி ரூ.692 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி  ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை எதிர்க் கட்சிகள் எடுத்து அவ்வப்போது பேசி வந்தார்கள். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே, ‘அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, தன்னைப் பற்றிய அவதூறு பேச்சுக்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கேட்டும் அறப்போர் இயக்கம் மீது எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். 

சும்மா அறிக்கை விடுவதுடன் நின்றுவிட மாட்டார் என்பதைக் காட்டும் வகையில் இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருக்கிறார்.  தேர்தல் நேரத்தில் இந்த ஊழல் விவகாரத்தை யாரும் கிளப்பி அ.தி.மு.க.வுக்கு சிக்கல் உருவாக்ககூடாது என்பதற்காகவே இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்திருக்கிறார்.

அதோடு, கட்சி  ஒருங்கிணைப்பு என்ற பெயரில் தளவாய் சுந்தரத்தை இழுப்பதற்கு பன்னீர் டீமும் பா.ஜ.க. டீமும் முயற்சி செய்தன. அதையும் முறியடித்துவிட்டார். நிஜமாகவே வரும் 2026 தேர்தலில் பெரிய கூட்டணி அமைப்பார்’’ என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link