Share via:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள்
அனைவரும் நீல நிறத்தில் கோட், சூட் போட்டுக் கொண்டு திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம்
என்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது. விசிக பேரணிக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும்
நீல நிறத்திலான ஆடை மற்றும் புடவைகளை அணிந்திருந்தனர். இந்த பேரணி
போதிய கவனம் பெறக்கூடாது என்பதற்காகவே பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்வதற்கு போலீஸாரை
களத்தில் இறக்கி பெரும் பரபரப்பை திமுக கிளப்பியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ரவிக்குமார், சிந்தனைச் செல்வம்
உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நீல நிற கோட் அணிந்து பேரணியில் பங்கேற்றனர். பேரணியில்
வழிநெடுக திறந்த வேன் மூலம் திருமாவளவன் முழக்கமிட்டபடி வந்தார். இந்த பேரணி முடிவில்,
‘இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம், வக்ஃபு திருத்தச் சட்டத்தைத் திரும்பப்
பெற வேண்டும், குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய மக்கள்
தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பேரேடு தயாரிப்பதைக் கைவிட வேண்டும் என்பது போன்ற
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரணி முடிவில் திருமாவளவன், “பாஜகவின் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த
சிலர் சினிமா கனவுகளோடு வந்துள்ளனர். அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட யாரும் எந்த விளம்பர
மாயைக்கும் பணிய மாட்டார்கள். சிறுத்தைகள் எப்பக்கமோ அப்பக்கம் தான் வெற்றியும். சிறுத்தைகள்
எப்பக்கமோ அப்பக்கம் தான் ஆட்சியும். தற்காலிக அரசியல் பயனுக்காக நாம் தவறான முடிவை
ஒருபோதும் எடுக்க மாட்டோம். தேர்தல் அரசியலில் கிடைக்கிற தற்காலிகப் பயன் முக்கியம்
அல்ல. துணை முத்ல்வர் பதவி முக்கியமல்ல, அம்பேத்கர் கனவான பிரதமர் பதவியை நோக்கி நகர்வோம்…’’
என்று பேசினார்.
இந்த பேரணி மீடியாக்களில் பெருத்த கவனம் பெறக்கூடாது என்பதற்காகவே
இந்த நேரத்தில் பூஜை ஜெகன்மூர்த்தி வீட்டின் முன்பு 500 போலீஸார் குவிக்கப்பட்டு, அது
பரபரப்பாக பேசப்பட்டது. பூவை ஜெகன்மூர்த்தி தப்பி ஓட்டம்..! ஜெகன் மூர்த்தி என்ன ரவுடியா?
என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. இத்தனைக்கும் எங்களுக்கும் பூவை.ஜெகன்மூர்த்திக்கும்
எந்த சம்பந்தமும் இல்ல”… என்று கடத்தப்பட்ட சிறுவனின் தாயார் வெளியிட்ட பரபரப்பு
வீடியோ பரபரப்பானது.
இந்த தகவல் அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள்
அனைவரும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.