News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த வரை வேறு யாரும் அறிக்கை தர முடியாது. பேட்டி கொடுக்க முடியாது. அப்படி யாராவது செய்தால் அண்ணாமலை டீம் வம்பு செய்து சந்திக்கு இழுத்துவிடும். ஆனால், நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, எல்லா விஷயங்களிலும் அவரை முந்திக்கொண்டு அறிக்கை விடுவது நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது.

இன்று அண்ணாமலை, ‘’சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின்’’ என்று உரிமைத் தொகை விவகாரத்தில் குளறுபடி என்று பெரிய பட்டியல் போட்டிருக்கிறார்.

இந்த விஷயங்களில் நயினார் நாகேந்திரன் செம அப்செட் என்கிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து வந்த பிறகும் வேண்டுமென்றே அண்ணாமலை கோஷ்டி அரசியல் செய்வதைக் கண்டு கடுப்பானாலும் நேரடியாக அதைக் காட்டாமல் வேறு வகையில் பதிலடி கொடுக்கிறார். அதனால் தான், டெல்லியில் இருந்து வந்த நயினார் நாகேந்திரன், ‘தவெகவும் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்’’ என்று நேரடியாகவே கோரிக்கை வைத்தார்.

விஜய்யை அண்ணாமலை விமர்சனம் செய்துவரும் நிலையில், வேண்டுமென்றே நயினார் தவெகவை கூப்பிடுவது அண்ணாமலை ஆட்களை டென்ஷன் ஆக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி போன்று மோதல் நடக்குமா அல்லது அண்ணாமலை அடக்கிவைக்கப்படுவாரா என்பது அமித்ஷா வருகையில் உறுதியாகிவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link