News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் கவிஞர் சினேகா வாசித்த ஒரு கவிதைக்கு எதிராக சீமானின் அன்புத் தம்பிகளும் ராமதாஸின் அருமைத் தொண்டர்களும் விதவிதமாக கெட்ட வார்த்தைகளில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் சினேகாவை வறுத்தெடுக்கிறார்கள்.

விழா மேடையில் அவர் படித்த கவிதை இது தான்.

செங்கோல் பிடித்து ஆண்ட பரம்பரை என

அடித்தொண்டையில் கத்துவார் !

மறுபக்கம் உள் ஒதுக்கீடு வேண்டும் என

அரசின் கால் பிடித்து சுற்றுவார்!

கொள்கை ஏதுமில்லா சாதி வெறி பிடித்த கிறுக்கு!

அரசியல் அதிகாரம் ஒன்றே அதன் இலக்கு!

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும்!

பச்சோந்தியே இவர்களைப் பார்த்தால் நாணும்!

அழுகிய பழம் எரிந்து பானை உடையுமா?

ஆளப் பிறந்தவர் எங்கள் திருமா!

இன்னொருவர் இருக்கிறார்

தமிழகத்தின் நவீன கோமாளி!

இவர் மேடைச் சிரிப்பை கேட்கும் தம்பி எல்லாம் ஏமாளி!

இந்த நூற்றாண்டின் மகத்தான போராளி, பிரபாகரனை

ஆமை சமைப்பவராய் அவமதிக்கும் இவரு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸின் பிசிறு!

ஒருநாள் பெரியாரின் பேரன் என்பார்!

மறுநாள் என் முப்பாட்டன் முருகன் என்பார்!

திராவிடத்தால் வீழ்ந்தோம் உறவே என்பார்!

அயலகத் தமிழரிடம் திறள் நிதி வாங்கி தின்பார்!

இவர் திராவிடத்தை அளிக்க ஆரியம் அனுப்பிய விஷ குப்பி!

தமிழகமே நாளை மிரட்டும் முகத்தில் காரி துப்பி!

இவரது கவிதைக்கு திருமாவளவன் கை தட்டி பாராட்டு தெரிவித்தார் என்பதற்காக அவரையும் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந்த விவகாரம் காவல் நிலையம் வரைக்கும் போகும் என்று தெரிகிறது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, ‘’விழாவில் கவிஞர்கள் என்ன கவிதை படிக்கப்போகிறார்கள்? எந்த கருத்தோடு படிக்கப்போகிறார்கள்?என யாருக்குமே தெரியாது. அது கவிஞர்களது கருத்துரிமை. அப்படித்தான் ஒவ்வொரு கவியரங்கத்திலும் கவிஞர்கள் சுதந்திரமாக கவிதை படிக்கிறார்கள். இப்படி படிக்கக்கூடாது; அப்படி படிக்கக்கூடாது என கவிதைக்குள் தலையிடுவது அநாகரீகம் .

கடந்த ஆண்டு மக்கள் கவி கபிலன் அவர்கள் தலைமை தாங்கி கவிதை படிக்கும் போது, செருப்பை சிம்மாசனத்தில் வைத்து அரசியல் நடத்துவது ராமாயாணம்! செருப்பை காட்டி கட்சி நடத்துவது சீமாயாணம். என படித்தார்.

அந்த வழியில் சினேகா கவிதை படிக்கும் போது சீமான் செய்துவரும் அருவருப்பு அரசியல் குறித்தும் பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் சாதி அரசியல் குறித்தும் விமர்சித்தார். இந்த கவிதையில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக வழக்கறிஞர் சினேகா அவர்கள் மீது ஆபாச தாக்குதல்கள் ஒரு பக்கம் மறுபக்கம் தலைவர் எழுச்சித்தமிழர் மீதும் நாகரீகமற்ற தாக்குதலை தம்பிமார்கள் தொடுக்கின்றனர். கவிஞர்களின் விமர்சனங்கள் குறித்து பதில் சொல்லாமல் மார்கழி மாதத்து தெருநாய்களை போல பிறாண்டுகிறார்கள்…’’ என்று மீண்டும் சூடேற்றி இருக்கிறார்.

அதுசரி, மேடையில் என்ன படித்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்றால், அந்த மேடையில் ஸ்டாலினை கிண்டல் செய்தாலும் இப்படித்தான் சமாளிப்பு கொடுப்பீர்களா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link