Share via:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட தனித்துவம் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்ற ஆண்டுதோறும் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி தேவசம் போர்டு நேர்முகத் தேர்வு நடத்தி இறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களுடன், ஐயப்பன் கோவில் கருவறை முன்பு சீட்டு குலுக்கல் முறையில் புதிய மேல் சாந்தியை தேர்வு செய்து வருகிறது. அப்படி நடத்தப்பட்ட தேர்வில் புதிய மேல்சாந்தியாக பி.என்.மகேஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பரமேக்காவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.என்.மகேஷ் கூறும்போது, ‘‘இந்த வாய்ப்பிற்காக தான் 10 வருடங்களுக்கு மேலாக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஐயப்பன் தன்னை அவருக்கு சேவை செய்ய அழைத்துள்ளதாக கூறிய அவர், அதற்கான வாய்ப்பை எனக்கு அளித்ததாகவும், இது என் முன்னோர்களின் ஆசிர்வாதமாகவும் கருதுகிறேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.