Share via:
அயோத்தியில் ராமர் கோயில் திறப்புவிழா நாடு முழுவதும் பண்டிகை
போலவே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு
ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
’’பல தலைமுறைகளாக, பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த,
எண்ணற்றோரின் தியாகம் நிறைவேறும் திருநாள், வரும் ஜனவரி 22 ஆகும். அயோத்தியில் பகவான்
ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை, பிரதிஷ்டை செய்யும் புண்ணிய வாய்ப்பு தமக்குக் கிடைத்திருப்பதாகவும்,
பாரதம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பக்தர்களின் பிரதிநிதியாக, அந்தப் புனிதமான பணியை
மேற்கொள்வது, ஶ்ரீராமரின் வரம் என்றே கருதுகிறேன்.
இந்த இறை பணியில், தாம், பாரதத்தின் 140 கோடி மக்களுக்கான ஒரு
கருவி மட்டுமே. மேலும், இந்தப் புனிதமான பணியை மேற்கொள்ளவிருப்பதால், வரும் 11 நாட்களும்
விரதம் மேற்கொள்ள இருக்கிறேன். ஶ்ரீராமர் வசித்த நாசிக்கில் உள்ள புனிதத்தலமான பஞ்சவடியில்
இருந்து விரதத்தைத் துவங்குகிறேன்.
ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்யும் புனிதப் பணியில்,
தமக்கு நாட்டு மக்கள் அனைவரின் ஆசிகளும், வாழ்த்துக்களும் வேண்டும்’’ என்று கேட்டுக்
கொண்டுள்ளார்.
மக்களிடம் வாழ்த்து கேட்டிருக்கிறார் மோடி. அதை மக்களும் கொடுக்கத்தான்
போகிறார்கள். இன்னமும் ராமர் கோயில் கட்டி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில்,
அவசர அவசரமாக விழா நடத்துவது எதற்காக, இந்த விழாவுக்காவது ஜனாதிபதி திரவுபதி முர்முவை
அழைப்பார்களா என்பது போன்ற கேள்விகளுக்குத்தான் விடையைக் காணோம்.