News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோர் தான் சிறந்த நடிகர்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாக பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, ‘‘அண்ணாமலையை தான் நேரில் பார்த்ததில்லை என்று சொல்லிய அவர், தமிழகத்தில் கலவரம் உண்டு பண்ண வேண்டும் என்பதையும், மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்பதையும் செய்து வருகிறார் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தை சீர்குலைத்து மதவெறிகாடாக்க மாற்ற வேண்டும் என்று நினைப்பதாக குற்றம்சாட்டினார்.



மேலும் தன்னை நடிகன் என்று கூறுகிறார்கள். ஆனால் நான் நடிகனே கிடையாது. இந்த உலகத்திலே நன்றாக நடிக்க தெரிந்த 2 பேர் இருப்பதாகவும் அவர்கள் அண்ணாமலை என்றும் பிரதமர் மோடி என்றும் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொன்ன நிலையில் அது நிறைவேறியதா என்று கேள்வி எழுப்பினார். இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை¬யும் நடிகர் மன்சூர் அலிகான் முன்வைத்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link