Share via:
பட்டுக்கோட்டை நாடியம்மன் திருக்கோயிலில் நான்கு ஆண்டுகளுக்கு
முன்பு நடந்த முறைகேடு இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த கோயில் பணமான 6,648
ரூபாயை செயல் அலுவலர் ரவிச்சந்திரன் கொள்ளை அடித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 5.2.2020 அன்று தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு
விழா நடைபெற்றது. இதனை அறநிலையத் துறை ஆணையராக இருந்த பணீந்தர ரெட்டி பார்வையிட சென்னையிலிருந்து
தஞ்சைக்கு வந்திருக்கிறார். அவருக்கு நாடியம்மன் கோவில் பணம் 6,648 ரூபாயை செலவு செய்ததாக
நாடியம்மன் கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் நிர்வாக ஆவணங்களில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த குற்றச் செயல் ஆலயம் காப்போம் என்ற சமூக நிறுவனத்தின் நிறுவனரும்
ஆடிடருமான ரமணன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோயில் பணத்தை எடுப்பது குற்றச்செயல்
என்று தெரிந்தும் ரவிச்சந்திரன் எப்படி செலவு செய்தார். நாடியம்மன் கோயிலின் அனைத்து
சொத்துக்களையும் அறநிலையத் துறை இவருடம் ஒப்படைத்திருக்கும்போது, தனிநபருக்காக இப்படி
செலவு செய்யலாமா..? இது தவிர வேறு என்னவெல்லாம் முறைகேடு நடந்துள்ளன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நம்பிக்கை மோசடி சட்டப்பிரிவு 409 மூலம் இதற்கு ஆயுள் சிறை தண்டனை
உண்டு. எனவே ஆணையர் பணீந்தர ரெட்டிக்கு இவர் செலவு செய்தது உண்மையா, அப்படி செலவு செய்தது
உண்மை என்றாலும் கோயில் பணத்தை எடுத்ததற்கு என்ன தண்டனை என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
சட்டப்படி தண்டனை கிடைக்கட்டும்..!