Share via:
சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவத்தைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது என்று ஆளும் தி.மு.க. அரசின் மீது மக்கள் அதிருப்திய அடைந்துள்ளனர்.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தின் மீது மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இதைவிட சட்டம் ஒழுங்கு மோசமாக முடியாது. காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கும் பயமில்லாமல் போய்விட்டது. மக்கள் பாதுகாப்பு கேட்டு செல்லும் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வெட்கித் தலை குணிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை காத்திடவும், தொழில் முதலீட்டை தக்க வைத்துக் கொள்ளவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.