Share via:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கிய நேரத்தில் பெரியாரை கையில் எடுப்பதற்குப் பயந்தார். அதனால் தான், ‘அண்ணா என் வழிகாட்டி, காமராஜர் என் தலைவர்’ என்று மட்டும் கூறினார். பெரியாரை கையில் எடுத்தால் ஆன்மிக மக்களைக் கவர முடியாது என்றும் பெரியார் கொள்கை பேசும் தி.மு.க.வுடன் தேவையின்றி மோதவேண்டாம் என்றும் நினைத்தார்.
ஆனால், விஜய் தன்னுடைய முதல் வழிகாட்டி என்றே பெரியாரை கூட்டி வந்திருக்கிறார். ஒரு வகையில் தந்தை பெரியாரை இன்றைய இளம் தலைமுறையிடம் கொண்டுசென்று சேர்க்கும் முயற்சி. ஒரு வகையில் இது தைரியமான அரசியல் முடிவு. பெரியாரை வைத்து ஓட்டரசியல் செய்துவரும் தி.மு.க.வுக்கு அவர்களுடைய பாணியிலே பதிலடி கொடுத்திருக்கிறார்.
பெரியாரை வேறு எந்தக் கட்சியும் கையில் எடுக்கத் தயங்குவதையே தங்கள் பலமாக நினைத்துவந்த தி.மு.க இப்போது பதறிப்போய் நிற்கிறது. அதனால் விஜய்யை எந்தெந்த வகையில் விமர்சனம் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கிண்டலாகவும் மோசமாகவும் விமர்சனம் செய்துவருகிறார்கள். இதற்கு விஜய் கட்சியினரும் கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
அது மட்டுமின்றி பாசச எதிர்ப்பு காட்டும் பாயாச அரசியலுக்கும் தி.மு.க பாணியிலே பதிலடி கொடுக்கிறார்கள். பெரியாரின் கைத்தடியை எடுத்து விஜய் ஆதரவாளர்கள் தி.மு.க.வை விரட்டத் தொடங்கிவிட்டார்கள். ஆக, நேற்று முளைத்த காளானை எல்லாம் பார்த்து அஞ்சும் அளவுக்கே ஸ்டாலின் குடும்ப அரசியல் இருக்கிறது என்பது தான் பரிதாபம்.