News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மியாட் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று வெற்றி அடைந்த அவரது மகன் ஈவேரா திருமகன் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் நின்று வெற்றி அடைந்தார். மீண்டும் எம்.எல்.ஏ.வை இழந்து நிற்கிறது ஈரோடு கிழக்கு.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை, மணப் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்குச் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தனர். விரைவில் குணம் அடைந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்து மரனம் அடைந்திருக்கிறார்.

தனக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று தயக்கம் தெரிவித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது. அனுதாப அலையில் எளிதாக வென்றுவிட முடியும் என்று நிறுத்தியதால் அவர் 75 வயதில் மரணத்தைத் தழுவியிருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் வருந்துகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கும் நிலையில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வருமா அல்லது அப்படியே காலியாக விடப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link