Share via:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஸ்வத்தாமன்
கைது செய்யப்பட்ட அதிர்ச்சியே இன்னமும் நீங்காத நிலையில், பா.ஜக.வின் வழக்கறிஞர் பிரிவு
துணைத் தலைவர் பால் கனகராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் ஆஜராகி இருப்பது
கிடுகிடு திருப்பமாக கருதப்படுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக
அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். ரவுடி திருவேங்கடம்
என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன்
கைது செய்யப்பட்டார்.
வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன். நாகேந்திரனுக்கு
இரண்டு மகன்கள்.. ஒருவர் அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.. மற்றொரு மகன்
அஜித் ராஜு. இவன் பாஜகவில் மிக முக்கிய நிர்வாகி ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமனுக்கு
பார் கவுன்சில் தேர்தல். நிலத்தகராறு என இரண்டு மோட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது வழக்கறிஞரான அஸ்வத்தாமன் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட
முயற்சித்த நேரத்தில் அதற்கு தடை ஏற்படுத்தியிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். அதே சமயத்தில்
திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சியில் உள்ள பிரபல சோப்பு கம்பெனிக்கு சொந்தமான
இடம் சுமார் 155 ஏக்கர் விற்பனைக்கு வந்திருக்கிறது. அந்த விவகாரத்தில் அஸ்வத்தாமன்
மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள். இந்த விஷயத்திலும்
ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்நிலையில் தான், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் தொழில் அதிபர்
ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமனை மீஞ்சூர்
போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என அஸ்வத்தாமன்
நினைத்திருக்கிறான்.
உடல் நலம் இல்லாமல் இருக்கும் ரவுடி நாகேந்திரன் நீதிமன்ற உத்தரவுப்படி
சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, விசிட்டர்ஸ் என்ற அடிப்படையில்
ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளான புன்னை பாலு, ஹரிஹரன், அருள், அஞ்சலை, மலர்க்கொடி மற்றும்
ஆருத்ராவில் இருந்து சில பேரும் நாகேந்திரனை சந்தித்து கொலைச் சதி தீட்டப்பட்டுள்ளது.
அந்த சதி திட்டத்தில் சம்போ செந்தில் சீசிங் ராஜா ஆகியோரும் முழுவீச்சில்
செயல்பட்டிருக்கிறார்கள். இதில் தற்போது ரவுடி நாகேந்திரனின் மகனும் அஸ்வத்தாமனின்
சகோதரரான பாஜக முக்கிய நிர்வாகி அஜித் ராஜுயையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளான்.
இந்த அஸ்வத்தாமன் புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்திக்கு மிக மிக நெருங்கிய
நட்புடன் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங்குடன் நேரடியாக மோத முடியாத பாஜக பால் கனகராஜூம் ,ஜெகன்
மூர்த்தியும் அஸ்வத்தமானை பயன்படுத்தி பார் கவுன்சில் தேர்தலில் நிற்க வைக்க முயற்சி
செய்தார்கள் என்பதாலே போலீஸ் சம்மன் அனுப்பி விசாரணை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பா.ஜ.க.வின் மிக முக்கிய பிரமுகர் ஒருவரும் சிக்குவார் என்று கூறப்படுகிறது.