Share via:
ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெண்கலம் வென்றுள்ள இந்தியா தனது 3வது பதக்கத்தை பதிவு செய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டித்தொடரின் 7வது நாளான இன்று (ஆகஸ்ட்1) ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூம் 50மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனை ஸ்வப்னில் குசாலே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கி சுடுதலில் சீனா தங்கமும், உக்ரைன் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது.
வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் போட்டியாகும். அதோடு இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியைப் போன்று ரெயில்வேயில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றியது ஆச்சரியத்தின் உச்சம்.
இதன் மூலம் இந்தியா தனது 3வது பதக்கத்தை வென்றுள்ளது. அதிலும் இந்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.