Share via:
திருமண விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘’நடைபெறவிருக்கின்ற
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
ஒன்றிய அரசின் பா.ஜ.க கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான
ஒன்றிய பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு வெளியிடும்.
சி.ஏ.ஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிசாமியிடம்தான்
கேட்க வேண்டும்.
ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பா.ஜ.க-வும்,
நாங்களும் ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றோம். 16-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமருடன்
மேடை ஏறுவதற்கான வாய்ப்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே, நாங்கள்
சொல்லியபடி நானும், டி.டி.வி.தினகரனும் இணைந்துதான் பணியாற்றிக் கொண்டுள்ளோம்’’ என்று
தெரிவித்திருந்தார்.
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு திடீரென நேரடியாக எடப்பாடி
பழனிசாமி குறித்தும் பா.ஜ.க. கூட்டணி குறித்தும் பன்னீர் பேசியிருப்பது, அவருக்கு டெல்லி
கொடுத்த தைரியம் என்றே தெரிகிறது.
இதையடுத்து, கூட்டணிக்கு எந்த கட்சியும் இன்னமும் இல்லாமல் ஆள்
தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்து, ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்று
நோட்டீஸ் ஒட்டியும் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை குறித்து இதுவரை பேசாத எடப்பாடி., சசிகலாவை
ஏமாற்றியவர், பொள்ளாச்சி குற்றங்களை கண்டுகொள்ளாதவர் என்று வரிசையாக போட்டு வருகிறார்கள்.
பன்னீருடன் சேர்ந்து தி.மு.க.வினரும் இந்த லீலைகளை செய்வதாக கொதிக்கிறது அ.தி.மு.க.
டீம்.
பன்னீருக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்றூ யோசிக்கிறார்களாம்…
முதல்ல கூட்டணிக்கு ஆளைத் தேடுங்க சார்.