News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி கொடுத்ததில் இருந்து, அவர் மீது டிடிவி தினகரனும் பாஜகவினரும் பாய்ந்து வருகிறார்கள்.

பாஜக மற்றும் அதிமுகவில் பன்னீருக்கு எந்த இடமும் இல்லை என்று உறுதியான பிறகே அவர் திமுக கூடாரத்துக்குச் செல்வதற்கு முடிவு செய்திருக்கிறார். அவருக்கு உரிய மதிப்பையும் மரியாதையும் பெற்றுத்தர முடியாதவர்கள் ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கே அருகதை இல்லை என்கிறார்கள்.

இப்போது திமுகவில் பன்னீருக்கு ஒரு முக்கியமான பதவி கொடுப்பதற்கு ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறாராம். அதோடு அவருக்கு அல்லது அவரது மகனுக்கு தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாம்.

இது குறித்து பேசும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ‘’திமுகவை ஆதரித்து ஓபிஎஸ் பேசியதிலிருந்து அவர் ஏதோ பஞ்சமா பாதகச் செயலைச் செய்தது போன்று எபெக்ட் கொடுக்கிறார்கள் அதிமுகவினர். திமுகவிலிருந்து அதிமுக உருவானது கொள்கை முரண்பாடல்ல. தனிநபர் முரண்பாடு மட்டுமே. ஆனால்,அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கும் பாஜகவோடு சேர்ந்திருந்து குலாவுவது வெட்மாக இல்லையா?

மோடியா? லேடியா? எனக் கேட்ட ஜெயலலிதா ஆன்மா உங்களை மன்னிக்குமா? இதுவரை எவ்விதக் கூச்சநாச்சமும் இல்லாமல் பாஜகவை ஆதரித்த ஓபிஎஸ், திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பதும் கூட பாஜக ஏற்பாடாகவே இருக்க முடியும் என்பதே என் பார்வை. ஏனெனில் அதிமுகவை அழிப்பதன் மூலமே பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பதால்,அதிமுக முகங்களான ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை வெளியேற்றி வேடிக்கை பார்க்கிறது…’’ என்று கொதிக்கிறார்கள்.

இந்த நிலையில் சசிகலாவிடம் இருந்து பன்னீருக்கு அழைப்பு போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் இரண்டு பேரும் சேர்ந்து நிற்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதனால் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link