News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர், விவசாயியை எட்டி உதைத்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 2ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் தங்பாண்டியன், தன்னிடம் கேள்வி கேட்ட விவசாயியை காலால் எட்டி உதைத்து பெரும் சர்ச்சை எழுந்தது.


இவ்விவகாரத்தை தொட்ர்ந்து தங்பாண்டியன் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில், கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தங்பாண்டியனை இடைநீக்கம் செய்வதாக வட்டார வளர்ச்சி மீனாட்சி உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமின் வழங்கியுள்ளது.


இந்நிலையில் இவ்விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான தகவல் வழங்காத பிள்ளையார்குளம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி, தலையாரி முத்துலட்சுமி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி இன்னும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link