Share via:

அதிகார பலத்துடன் வலம் வந்த பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு
ஆடியோ விவகாரத்தினால் அந்த பதவியை இழந்துவிட்டார். இதையடுத்து டம்மியாக ஐ.டி. மினிஸ்டர்
பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டம்மி பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது.
சட்டமன்றத்தில் தன்னுடைய கூடலூர் தொகுக்கு டைடல் பார்க் அமைத்துத்
தர வேண்டும் என்று அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த பிடிஆர். பழனிவேல் ராஜன், ‘’யாரிடம் நிதியும், திறனும்,அதிகாரமும்
இருக்கிறதோ அவரிடம் கேளுங்கள்” என்று மனம் நொந்து, வெந்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டார்.
இப்படியெல்லாம் பேசக்கூடாது, முதல்வரிடம் பேசி நிதி பெற்றுத் தருகிறேன்
என்று கூறவேண்டும் என்று அப்பாவு சட்டமன்றத்திலேயே பழனிவேல் தியாகராஜனுக்குப் பாடம்
எடுத்தார். இந்நிலையில், சட்டமன்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர் பதவியில் நீடிக்க வேண்டுமா,
அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்று தி.மு.க.வினரே புகார் தெரிவிக்கிறார்கள்.
சட்டமன்றம் முழுக்க முழுக்க ஸ்டாலின் கையில் இல்லை என்பது போலவே
எல்லா நிகழ்வுகளுடம் நடக்கின்றன. நான் ஐடி மினிஸ்டர்தான் ஆனா அதிகாரம் என்னிடம் இல்லை
என்று டி.ஆர்.பி. ராஜாவை நோக்கி கை காட்டுகிறார் பழனிவேல் தியாகராஜன்.
சமீபத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ எழுந்து நீர்பாசனத்துறை தொடர்பாக
ஒரு கோரிக்கையை வைக்கிறார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் “அவர் பேசுவது எனக்கு
புரியலை. ஆனாலும் அவர் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என நக்கலாகப் பேசினார். அதேபோல்,
உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற வேல்முருகனையும் அவமானம் செய்கிறார்கள்.
இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் தி.மு.க.வினர், ‘’பழனிவேல் தியாகராஜன் நல்லவர். அவரது
தகுதிகள், திறமைகள், தைரியம்,நேர்மை எல்லாம் இன்றைய அரசியல்வாதிகளிடம் காண முடியாதது.
ஆனாலும், அவருக்கு இந்த அரசியல் ஒத்துவராது. எனவே ராஜினாமா செய்யுங்கள் என்று தி.மு.க.வினர்
அடித்து விளையாடுகிறார்கள்.