Share via:
பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு
விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள்
கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள்
சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை
கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள்
செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அதோடு இந்து அல்லாதவர்கள் பழனி கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே
அனுமதிக்க கூடாது. இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை வைக்க வேண்டும் எனவும் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு
கூறியிருக்கிறார்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் அனைத்து மதத்தினரும் எல்லா மத கோயிலுக்கும் சென்று வருகிறார்கள். இந்துக்களில்
நிறைய பேர் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் நாகூர் தர்ஹாவுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
யாரும் யாரையும் தடுப்பதில்லை. அப்படியிருக்கும்போது மாற்று மதத்தினரை தடுத்து நிறுத்துவது
சரியான செயலாக இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
கோயிலுக்குள் சென்று பிரச்னை செய்பவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களை கைது செய்து கடுமையான தண்டனை தரலாமே தவிர, இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதிக்ககூடாது
என்று சலசலப்பு எழுந்துள்ளது.