Share via:
தனியார் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் செய்தி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அது எந்த நாடு என்பது குறித்து இப்பதிவில் விரிவாக காணலாம்.
விடுமுறைகளில் பல வகை உண்டு. மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, சாதாரண விடுப்பு. இவைகளில் குறிப்பிட்ட காலவரம்பை தாண்டினால் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்து விடுவார்கள். சில நிறுவனங்களில் மட்டும் சுற்றுலா செல்ல சிறப்பு விடுப்பு விடுவதும் உண்டு. ஆனால் தாய்லாந்தில் ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் டேட்டிங் செல்ல சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கிவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒயிட்லைன் குரூப் என்ற இந்த தனியார் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இச்சலுகையை அறிவித்துள்ளது. டிண்டர் லீவ் என்ற பெயரில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊழியர்கள் தங்களுக்கு விருப்பமான ஆண் நண்பர் மற்றும் பெண் தோழியுடன் டேட்டிங் செல்லலாம். மேலும் டிண்டர் கோல்டு மற்றும் டிண்டர் பிளாட்டினம் என்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படுகிறது என்பது குறித்த சரியான விவரம் தெரியவில்லை.
இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2024 டிசம்பர் மாதம் வரையில் பணியில் சேர்ந்து, பயிற்சி காலத்திற்கான வேலையை நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த டிண்டர் லீவ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.