Share via:
விஜய்யை விட அஜித் நாட்டு மக்களுக்காக அப்டியென்ன சேவையாற்றினார்…
அவருக்கு எதுக்கு பத்ம விருது என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துவந்த
நிலையில் இன்று அவரது கடைசி படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள்.
திரைப்படம் மட்டுமின்றி டிரோன், ரேஸ் என்று பல விஷயங்களிலும் கவனம்
செலுத்துபவர். அதோடு எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவுக்குள் வந்து தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வெற்றியை பெற்று கோலிவுட்டின் தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் அஜித்குமார். இவரது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றி, தோல்விகளை கண்டிருக்கிறார். அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றளவும் அவருக்கான கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை அதனாலே அவருக்கு பத்மபூஷண் விருது
வழங்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.வினர் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க.வினரும் அஜித்துக்கு பாய்ந்து பாயந்து வாழ்த்து
சொல்லிவருகிறார்கள். ஆனால், விஜய் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் மட்டும் கடுமையாக விமர்சனம்
வைக்கிறார்கள். அதாவது, ‘’விஜய் அரசியலுக்கு வந்து நேரடியாக பா.ஜ.க.வை தாக்குவதால்
வேண்டுமென்றே அஜித்துக்கு பதவி கொடுத்து மோதலைத் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். சினிமாவில்
எங்களை ஜெயிக்க முடியாத அஜித்தால், அரசியலிலும் ஜெயிக்க முடியாது’’ என்று கூறிவருகிறார்கள்.
அஜித்துக்கு திரையுலகில் அத்தனை பேரும் வாழ்த்து தெரிவித்துவரும்
நிலையில், விஜய் மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவரது அடுத்த படமான
ஜன நாயகன் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முன்பு விஜய் ஷெல்பி எடுத்தது போன்றே
இந்த படத்தின் முதல் போஸ்டரும் அமைந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.
அரசியலுக்கு வந்த பிறகும் அவங்க மோதல் முடியாது போலிருக்கிறதே…