Share via:
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மிதமான மற்றும் கனமழை மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கன மழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. இப்பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.