Share via:
மும்பையில் நடைபெற்ற பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின்
தலைவர் முகேஷ் திருபாய் அம்பானி அவர்களின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண வரவேற்பு
நிகழ்ச்சியில் நம்ம ஊரு ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஒரு லோக்கல் டான்ஸ் ஆடியது, அவரது
ரசிகர்களையே அதிர்ச்சி அடைய வைத்தது.
ஏனென்றால் அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு டான்ஸ்
ஆடுபவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய பணப்பரிசு வழங்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்துக்கும் இப்படி பணத்துக்கு ஆசைப்பட்டு ஆட்டம் போடலமா என்று அவரது ரசிகர்களே
மனம் வருந்துகிறார்கள். இதுவரை எங்கேயும் ரஜினி தன்னை இப்படி வெளிப்படுத்தியதே இல்லை.
இப்போது அந்த திருமணத்தில் இன்னொரு நபரும் கலந்துகொண்டது தெரியவந்திருக்கிறது.
அவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் இப்போது பா.ஜ.க.வின் ஆதரவு நபராக வலம் வரும்
ஓ.பன்னீர்செல்வம்.
தன்னுடைய இரண்டாவது மகனுடன் அம்பானி வீட்டுத் திருமணத்திற்குச்
சென்று நினைவுப் பரிசு கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அம்பானிக்கும்
பன்னீருக்கும் என்ன தொடர்பு..? முதல்வராக இருந்த காலத்தில் அம்பானிக்கு அரசு சொத்தை
எழுதிக்கொடுத்து விட்டாரா… இவர்களுக்குள் உள்ள டீலிங்கை ஆய்வு நடத்த வேண்டும் என்று
எடப்பாடி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் பன்னீரும் சென்று நிற்கிறார்.
இப்படி அடிமை மாதிரி இருப்பதற்குப் பதிலாக பா.ஜ.க.வில் சேர்ந்துகொள்ளுங்கள் அது தான்
உங்களுக்கு ஏற்றது. இனி ஓசிச்சோறு பன்னீர்செல்வம் என்று உங்களை அழைக்கப் போகிறோம் என்று
கலாய்க்கிறார்கள்.
அதேநேரம் பன்னீரின் ஆதரவாளர்களோ, ‘அம்பானியிடமிருந்து பன்னீருக்கு
மிகப்பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை’’ என்று
பெருமிதம் கொள்கிறார்கள்.