Share via:

இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் எந்த சிரமமும் இன்றி செய்து முடித்திருக்கிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்
என்று பிரதமர் மோடி அறிவிப்பு செய்திருந்தார். இந்தியா முழுக்க நேற்று போருக்கான ஒத்திகை
பார்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 1.44 மணியளவில் பாகிஸ்தான் மண்ணில், ‘ஆபரேஷன் சிந்தூர்’
என்ற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக்
குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 12 பேர்
படுகாயம் அடைந்ததாகவும், இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் பறிபோன பெண்களின் குங்குமத்தைக் குறிக்கும்
வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த தாக்குதல்களின் முக்கிய
இலக்கு பஹவல்பூர். பாகிஸ்தானின் 12வது பெரிய நகரமான பஹவல்பூர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின்
தாயகம் ஆகும். இங்கு ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா வளாகத்தைத் தளமாகக் கொண்டு ஜெய்ஷ்-இ-முகமது
செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 600க்கு மேற்பட்டோர் பயிற்சி
எடுக்கும் வசதிகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. புல்வாமா உட்பட இந்தியா மீது நடத்தப்பட்ட
தாக்குதல்கள் இங்கே இருந்துதான் திட்டமிடப்பட்டதாகவும், அதற்கான பயிற்சியும் இங்கேதான்
அளிக்கப்பட்டது. அதேபோல் முரித்கே பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் செயலகம் மற்றும் பயிற்சி
முகாம்கள் உள்ளது. மும்பை தாக்குதலில் பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் பயிற்சி
பெற்ற இடம்
இதையடுத்தே இரண்டு பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது
(JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் கட்டமைப்புகளை அழிக்கும் பொருட்டு இந்தியா சர்ஜிக்கல்
ஸ்ட்ரைக் நடத்தியிருக்கிறது. இந்த ஏவுகணை தாக்குதலை இந்திய ராணுவம் எந்த சிரமமும் இன்றி செய்து
முடித்திருக்கிறது.
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக,
ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, சம்பா,
கத்வா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் எதிரொலியாக இந்தியாவில் ஜம்மு, ஸ்ரீநகர், லே, தர்மசாலா, அமிர்தசரஸ் ஆகிய
5 விமான நிலையங்களுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சரண் அடையவில்லை என்றால் தாக்குதல் தீவிரமாகும் என்றே
சொல்லப்படுகிறது.