Share via:
இந்தியாவில் 8000 கோடி மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர்
மோடி 5000 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்று நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி
தமிழகத்தில் பேசி அவமானப்பட்டார். அதை தூக்கி சாப்பிடும் வகையில் மத்திய நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன் முத்ரா லோன் பற்றி பேசியிருக்கிறார்.
கோவை அன்னபூர்ணா அதிபரை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க
வைத்த நிர்மலா சீதாராமன் விவகாரத்தை இந்திய அளவுக்கு பரபரப்பாக்கி விட்டார் ராகுல்
காந்தி. இதையடுத்து நாடு முழுக்கவே நிர்மலா சீதாராமனின் அடாவடிக்கு கடுமையான எதிர்ப்பு
எழுந்துள்ளது.
இந்த நிலையில் வாயைத் திறந்தாலே பொய் என்று மீண்டும் மாட்டிக்கொண்டிருக்கிறார்
நிர்மலா சீதாராமன். சமீபத்தில் நிர்மலா சீதாராமன், ‘தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு
முத்ரா லோன் கொடுக்கப்பட்டுள்ளது கோவை மக்களுக்கு மட்டும் 20 லட்சம் பேருக்கு முத்ரா
லோன் வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடி பேர் தான். இங்கு
2.25 கோடி ரேசன் கார்டு மட்டுமே இருக்கின்றன. இந்த நிலையில் எப்படி 5.6 கோடி பேருக்கு
முத்ரா லோன் வழங்கியிருக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் ஒட்டுமொத்த கோவை மக்களின் ஜனத்தொகை 30 லட்சம் பேர் மட்டுமே
இருக்கும்போது எப்படி 20 லட்சம் முத்ரா லோன் வழங்கியிருக்க முடியும்? இதை அவரிடமே கேட்டபோதும்,
அப்படித் தான் ரிப்போர்ட் சொல்லுது என்று சொல்கிறாரே தவிர, ஏதோ தவறான தகவல் என்று ஒப்புக்கொள்ளாமல்
செக் செய்து சொல்கிறேன் என்கிறார்.
அதேபோல், கோவை மாவட்டம் சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் இளைஞர் ஒருவர்,
செமிகன்டக்டர் ஏன் இந்தியாவில் தயாரிக்காமல் இறக்குமதி செய்யப்படுகிறது என்று ஒரு தெளிவான
கேள்வி கேட்டார். அதற்காக அந்த இளைஞரை மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார் நிர்மலா
சீதாராமன். வரும் 2026 தேர்தலுக்கு நிர்மலா சீதாராமனை இரண்டு நாட்கள் பா.ஜ.க. அனுப்பிவைத்தால்
போதும், தி.மு.க. 234 தொகுதியிலும் வென்றுவிடலாம் என்று உடன்பிறப்புகள் நிம்மிக்கு
ஜே போடுகிறார்கள்.