Share via:
நாடாளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல்
மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்தது. இந்த தேர்தல் மசோதாவை நிறைவேற்ற மொத்த 461வாக்குகளில்
3ல் 2 பங்கு பெரும்பான்மையான 307 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் அரசுக்கு 269 வாக்குகள்
மட்டுமே கிடைத்தது, எதிர்க்கட்சி 196 வாக்குகள் பெற்றிருந்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்துவிட்டது. கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஓட்டவில்லை என்ற கணக்கில், சுற்றி வளைத்து இதை நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு
அனுப்பும் மசோதாவை இன்று அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு ஆதர்வாக கிடைத்தது 269 வாக்குகள்.
எதிர்க்கட்சிகள் 198 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால்
நேற்றைய வாக்கெடுப்பில் பாஜக எம்.பி.க்கள் 20 பேர் வரவில்லை. மோடியும் இந்த வாக்கெடுப்பில்
கலந்துகொள்ளவில்லை. அதைவிட கேலிகூத்தாக வாக்கெடுப்பின் போது மின்னணு இயந்திரம் பல பேருக்கு
வேலை செய்யாததால், சிலருக்குவாக்கு சீட்டு முறை கையாளப்பட்டுள்ளது.
மக்களவையில் 500
பேருக்கு வாக்கெடுப்பு சரியாக நடத்த முடியாத நிலையில், நாடு முழுவதும் நாடாளுமன்றத்
தேர்தலையும் அத்தனை மாநிலத் தேர்தலையும் ஒரே நேரத்தில் எப்படி நடத்துவார்கள் என்பது
கேள்வியாகியுள்ளது. இப்போது இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கே இந்த மசோதாவுக்கு
என்ன ஆகும் என்று தெரியுமா..? விவாதங்களுக்கு மேல் விவாதங்கள் நடக்கும். அதாவது, எந்த
ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும். ஒருபோதும் அந்த மசோதா
மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு வராது. அதாவது, இருக்கும் ஆனா இருக்காது
என்ற நிலையில் மசோதா சேர்ந்துவிடும். இனிமேல் பா.ஜ.க.வினர் இந்த மசோதா பற்றி வாய் பேசமாட்டார்கள்.