Share via:
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்பது கவர்னரின் உத்தரவுப்படி
திட்டமிட்டுத் திருத்தப்பட்டது என்பது தான் தி.மு.க.வின் குற்றச்சாட்டு. ஆனால், இதன
கவனக்குறைவு என்கிறது டிடி தமிழ். இதையடுத்து, கவனக்குறைவு என்றால் யாராவது ஒருவர்தானே
திராவிடம் என்பதை தவறவிட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’கவர்னர் திட்டமிட்டு திராவிடத்தை
தவிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்பது அந்த பாடல் பாடப்படும் நேரத்தில் அவரது உடல்மொழி
மூலம் அறிய முடிகிறது. டிடி தமிழ் சொல்வது போன்று கவனக்குறைவு என்றாலும் ஒருவர் தப்பா பாடலாம், அது எப்படி நான்கு பேரும் சொல்லி வைச்ச
மாதிரி அந்த குறிப்பிட்ட வரியை தவிர்த்து பாடுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இது திட்டமிட்ட செயல் என்பதால் உரிய விசாரணை தேவை. ரவி குறிப்பிட்ட வரியை தவிர்க்க உத்தரவிட்டது
போல் தெரிகிறது அந்த வரி தவிர்க்கப்பட்டுவிட்டதா என உடல் மொழி ஆம் என தெரிந்த உடன்
அவர்கள் பக்கம் திரும்பி ஒரு பார்வை பின் சாதித்து விட்டோம் என ஆணவ சிரிப்பு சிரிக்கிறார்.
டிடி இது போன்ற விஷயங்களில் மிகக் கறாரான
அணுகுமுறையுடன் செயல்படும். எனவே, இது திட்டமிட்ட செயல் என்பதை டிடி உறுதி செய்யும்
வகையில் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தமிழ் வாழ்த்துப் பாடியவர்களை ‘போலீஸ்
நிலையத்துக்கு வரவழைத்து கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் உண்மையைச் சொல்வார்கள்.
அவர்கள் கை காட்டும் நபரை கைது செய்ய வேண்டும். தவறாகப் பாடியவர்கள் பாத்ரூமில் வழுக்கி
விழுந்து மாவுக்கட்டு போட வேண்டும்.
டிடி தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது, தமிழ்நாட்டை
அவமதித்தது தான். இதில் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க என்ன இருக்கிறது ? DD யும் ஆளுநரும்
சேர்ந்து மக்களிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி, தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாகப்
பாட வேண்டும். அதாவது, ‘’ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து
சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.” என்ற பாடல் தமிழகம்
முழுக்க ஒலிக்க வேண்டும்’’ என்று குரல் எழுப்புகிறார்கள்.
தி.மு.க.வுக்கு திடீரென முதுகெலும்பு
முளைத்திருக்கிறது. அ.தி.மு.க.வும் பாய்கிறது. கவர்னர் மன்னிப்பு கேட்டால் தான் பிரச்னை
தீரும்.