Share via:
வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற அக்டோபர் 1ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதேபோல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும் ஒன்றாக சேர்த்து காணொலி காட்சி வாயிலாக அக்டோபர் மாதம் 1ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். மேலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பலரை மாற்றி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
