Share via:
நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது ரசிகர்கள் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
குமரிக்கடலில் உருவான காற்று கீழடுககு சுழற்சி காரணமாக குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பலரது வீடுகள் மழைவெள்ளத்தோடு அடித்து செல்லப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியினர் ஹெலிகாப்டர் வாயிலாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். பலர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பில் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ரசிகர்கள் சந்தித்தனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர், பால் பவுடர், பிஸ்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து ரஜினிகாந்த் சார்பில் ரசிகர்களால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் இது குறித்த புகைப்படங்களை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.