Share via:
சென்னை அணிக்கு 5 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடினார். ஆனால் இந்த முறை கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராய் கெய்க்வாட் தலைமையின் கீழ் விளையாடினார்.
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றும், அடுத்த ஆண்டு (2025)அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு CSK நிறுவனம் எம்எஸ் தோனிக்கு விளையாடுவர் என உருதி அளித்தன .
அதை தொடர்ந்து தோனியின் முன்னாள் தொழில்முறை கூட்டாளிகளான மிஹிர் திவாகர் மற்றும் சவுமியா தாஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் ஜார்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பின .
திவாகர் மற்றும் தாஸ் ஆகியோர் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் அவர்கள் , தோனியின் பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்திருந்தனர்.
அந்த நிலையில் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, இருவரின் மீதும் எம்எஸ் தோனி 2024 ஜனவரி 5ம் தேதி ராஞ்சியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தர் .
அதை தொடர்ந்து புகார் மனுவில் , 2021-ம் ஆண்டில் அவர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகு தொடர்ந்து தனது பெயரைப் பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளைத் தொடகினார் . இதை தொடர்ந்து ரூ.15 கோடி மோசடி செய்ததாக தோனி அதில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் திவாகரும், தாசும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு அவருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது .