Share via:
கூட்டணி ஆட்சிக்கு
நாங்கள் ரெடி என்று விஜய் கொடுத்த அறிவிப்பினால், ஏகப்பட்ட கட்சிகள் படையெடுத்துவருவார்கள்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது. திருமாவளவனுக்கு போடப்பட்ட ஸ்கெட்ச் குறி தவறிய நிலையில்,
முதல் கூட்டணிக் கட்சியாக இணைந்த முஸ்தபாவும் திடீரென பின்வாங்கியிருப்பது, விஜய் ரசிகர்களை
டென்ஷனாக்கியுள்ளது.
நேற்றைய தினம் தமிழ்நாடு
முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தஃபா விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துப்
பேசினார். இந்நிலையில், 2026ல் த.வெ.க உடன் இணைந்து தேர்தலை முஸ்லீம் லீக் சந்திக்கும்
என்றும் இஸ்லாமியர்களை த.வெ.கவுக்கு எதிராக திருப்பும் திமுகவின் அரசியல் எடுபடாது
என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பிவந்தனர்.
இந்த நிலையில் திடீரென முஸ்தபா பல்டி அடித்திருக்கிறார். இன்று
அவர், ‘’விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்து தெரிவிக்கவே நிர்வாகிகளை சந்தித்துப்
பேசினோம். ஆனால், இந்த சந்திப்பு தேர்தல் கூட்டணி எனும் அளவுக்குப் பேசப்படுவதால் தெளிவு
படுத்தவேண்டியது அவசியமாகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்துப் பேசி முடிவெடுப்போம்
என்று கூறியிருக்கிறார்.
இதுவரை முஸ்லிம் லீக் கட்சி தேர்தலிலேயே போட்டியிட்டதில்லை என்பதும், இது ஒரு லெட்டர் பேடு
கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களே பின்வாங்கிவிட்டார்கள் என்றால், அது விஜய்க்கு
பேராபத்து தான்.