Share via:

திமுகவின் ஊழல் அமைச்சர்களான பொன்முடி, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி
ஆகியோருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு மே 2ம் தேதி அவசர செயற்குழு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வேகமெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் திடீரென நம்பிக்கையில்லா
தீர்மானம் கொண்டுவந்தனர். இதுகுறித்து ஒட்டுமொத்த திமுக அரசுமே மக்களின் நம்பிக்கையை
இழந்து நிற்கிறது. இருப்பினும், நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி,
பொன்முடி ஆகியோர் அமைச்சர்களாக தொடருவது வெட்கக்கேடு என்று தெரிவித்தனர். இந்த நம்பிக்கையில்லா
தீர்மானம் எடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் மே 2-ம் தேதி நடைபெறும்
என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற 2.5.2025 – வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு,
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அ. தமிழ்மகன்
உசேன் தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள செயற்குழு
உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச்
செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
(மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள்
அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து,செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததில் அடிமட்டத் தொண்டர்கள் பலரும்
அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது. அன்வர்ராஜா, ஜெயக்குமார் போன்ற மாஜிக்கள் கட்சியிலிருந்து
வெளியேறும் சூழல் இருப்பதாகத் தெரியும் நிலையில் இந்த செயற்குழுக் கூட்டம் கூடுகிறது.
எனவே கூட்டத்தில் அனல் பறப்பது உறுதி.