Share via:
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒருவரை பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு மம்தா ஆதரவு கொடுத்திருக்கும் விவகாரம் கூட்டணியை உடைக்கும் அளவுக்குப் போயிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் தனக்குத்தான் பிரதமர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நிதிஷ்குமார் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தில்லி, அசோகா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கே பெயர் முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனையை கார்கே நிராகரித்தார். தேர்தலில் அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்கள் பெற்று மோடியை பதவியிலிருந்து நீக்குவதே இலக்கு, அதன்பிறகே பிரதமர் வேட்பாளர் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால், இந்த விவகாரம் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கிவிட்டது. தன்னுடைய பெயர் பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது நிதிஷுக்கு எரிச்சலை உருவாக்கிவிட்டது. அதனால்தான், அந்த கூட்டத்தில் இந்தியில் பேசி எல்லோரையும் எரிச்சலாக்கிவிட்டார். இதையடுத்து அவர் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே இந்தியா கூட்டணியில் விழுந்திருக்கும் விரிசல் பா.ஜ.க.வுக்கு மிகுந்த ஆனந்தத்தை உருவாக்கியுள்ளது. சமாளிப்பாரா ராகுல்..?