Share via:
தமிழகம் வருகை தந்திருக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
நேற்று காலை எடப்பாடி பழனிசாமி, எல்.கே.சுதிஷ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதையடுத்து நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் நேரடியாகவே அண்ணாமலைக்கு ரெய்டு விடுத்திருக்கிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு நட்சத்திர
ஓட்டலில் பாஜ நிர்வாகிகளுக்கு விருந்தளித்தார். இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில்
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், எச்.ராஜா
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், ‘கடந்த மக்களவை தேர்தலில்
நாம் ஏன் ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதற்கு யார் காரணம். யார் பொறுப்பு
ஏற்பது. திட்டமிட்டு கூட்டணி அமைத்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம். ஆனால்,
தோல்வி அடைந்தோம். அதோடு கோவையில் நான் பேட்டி அளிக்கும்போது ஒரு ஓட்டல் உரிமையாளர்
பேசிய வீடியோ வேண்டுமென்றே வெளியாகியது. அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை.
ஆனால், மாநில கட்சி மட்டும் ஏன் கேட்டது. எனக்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டியது
இல்லை. கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நான் விரும்பவில்லை. கெட்ட பெயர் ஏற்படும்
வகையில் நடந்து கொள்ள மாட்டேன். கட்சிக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்த மாட்டேன்.
இனிமேல் புதிய தலைமை இதுபோன்ற பிரச்னைகளை கவனம் செலுத்த, மாவட்ட
நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தன்னிச்சையாக யாரும் செயல்படக்
கூடாது. கட்சியை வளர்க்க வேண்டும். வெற்றியை பெற்றாக வேண்டும். அதற்காக நாம் உழைக்க
வேண்டும். நமக்குள் சண்டை போடக்கூடாது’’ என்று நேரடியாகவே அண்ணாமலையைக் கண்டித்தும்
கடுமையாகவும் பேசியிருக்கிறார்.
இதையடுத்து அண்ணாமலை டீம் ஆத்திரமாகவும் நயினார் டீம் உற்சாகத்திலும்
துள்ளிக் குதிக்கிறது.