Share via:
தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்கவில்லை
என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய குரலுக்கு மத்திய நிதியமைச்சர்
சம்பந்தமே இல்லாமல் ஆவேசமாக ஜல்லிக்கட்டு விவகாரத்தை எழுப்பி விவகாரத்தை திசை திருப்பியிருக்கிறார்
என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இன்று நிர்மலா சீதாராமன், ‘’தி.மு.க.வினர் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்தது, அதற்கு
தி.மு.க. சைலன்ட் பார்ட்னராக இருந்தது’ என்று பேசினார். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு
தெரிவித்ததும் தமிழ் மொழியிலே தொடர்ந்து ஜல்லிக்கட்டு குறித்தே பேசியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது,நாடு முழுவதும்
ஏராளமான விலங்கு ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜெய்ராம்
ரமேஷ், பொங்கல் கொண்டாட்டங்களின் போது தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளைப்
பயன்படுத்துவதைத் தடை செய்ய முன்முயற்சி எடுத்தார்…விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்,
1960 இன் பிரிவு 22 இன் கீழ் காளைகளை விலங்குகளாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யும்
அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ரமேஷ். அதனால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. மோடியே
அந்த தடையை நீக்கினார்’’ என்று பேசினார்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’நிதியைக் கேட்டால் ஜல்லிக்கட்டுக்குத்
தாவுகிறார்கள். வாட் ஸப் பார்வேர்டுகளை இன்னமும் பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும் வரை ஜல்லிக்கட்டு தடையின்றி எந்தப் பிரச்சனையுமில்லாமல்
நடந்தது. பாஜக ஆட்சி அமைந்தவுடன் தான் ஜல்லிக் கட்டு நிறுத்தப்பட்டது. நாங்களே பாம்
வச்சு நாங்களே எடுக்கறோம் சீன் போடுகிறார்கள்’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில், ‘திருச்சி சிவா நீங்க நியாயத்தை பேசுவது இல்ல..!
” சும்மா இங்க கத்திட்டு இருக்காதீங்க.. தி.மு.க. எம்.பி.க்களே உங்களுக்கு தான் பதில்
சொல்கிறேன்.. அமைதியா உட்கார்ந்து கேளுங்க.. எப்போ பாரு மோடி மோடினு சொல்றீங்க..’’
என்று நிர்மலா சீதாராமன் ஆவேசம் காட்டியது வைரலாகி வருகிறது.
மக்களுக்கு உதவாத பட்ஜெட் போட்டுவிட்டு நாட்டில் பாலாறும் தேனாறும்
ஓடுவதாக நிர்மலா சீதாராமன் பேசுகிறார் என்று பிரியங்கா காந்தி கடுமையாக கண்டனம் தெரிவித்ததை
மறைப்பதற்காகவே இந்த ஆவேசம் என்கிறார்கள். ‘’இப்படி ஆணவமாகப் பேசிய ஜெயலலிதாவை பத்தி
உருட்ட வைத்தவர்கள் தி.மு.க.வினர். எச்சரிக்கையாக இருங்கள்’’ என்று பதிலுக்கு உடன்பிறப்புகள்
எகிறுகிறார்கள்.