Share via:
அம்பேத்கரை அமித்ஷா
அவமதிப்பு செய்த விவகாரத்தில் நாடாளுமன்றமே முடங்கிவிட்டது. அதேநேரம், ‘’ மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அம்பேத்கருக்கு
கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதைகளும் கிடைக்கிறது. உண்மையில் அம்பேத்கரை கொண்டாடுவது
பாஜகவும், மோடியும் மட்டும் தான்…’’ என்று அமித்ஷா அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொண்டு
இருக்கிறார்.
ஆனால், சொல் ஒன்று
செயல் ஒன்று என்பதற்கு உதாரணமாகவே மத்திய அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இந்திய
அரசமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள
சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் படம் இடம்பெறவில்லை என்பது
மீண்டும் ஒரு அதிர்ச்சியலையைத் தூண்டியுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை
உருவாக்குவதற்குப் பாடுபட்ட அம்பேத்கருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற தலைவர்கள்
படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது வரலாற்றைத் திரிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த காலண்டர்கள் திரும்பப்பெற வேண்டும். இந்த செயலுக்காக மக்களவை செயலகம் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அம்பேத்கரை வைத்து
விளையாடுவதே வேலையாகப் போயிடுச்சு.