News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.


தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நெல்லையில் பட்டியல் சமூக இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று கூறிய அவர், புதியவர்களும் அரசியலுக்கு வந்து அவர்களுடைய கருத்தை நிலை நாட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு அளிப்பது போன்று பேசியுள்ளது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையில் நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் 2026 தேர்தலில் கப்பு முக்கியம் பிகிலு என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link