Share via:
உரிய நிதி வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து
நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை
சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திவருகிறார்கள்.
தமிழ்நாடு கொடுக்கும் 1 ரூபாயிலிருந்து 26 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள்.
கர்நாடகாவிற்கு 16 பைசாவும் தெலுங்கானாவுக்கு 40 பைசாவும், கேரளாவுக்கு 62 பைசாவும்
ஆந்திராவுக்கு 50 பைசாவுக் கொடுக்கிறார்கள். அதேநேரம் 1 ரூபாய் கொடுக்கும் மத்திய பிரதேசத்துக்கு
1ரூபாய் 70 காசும், உத்தரபிரதேசத்துக்கு 2 ரூபாய் 2 பைசாவும் கொடுக்கிறார்கள்.
தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக இன்று தமிழகம் முழுக்க
பல்வேறு பஸ் ஸ்டாண்ட்களில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து மத்திய அரசின் நிதி பகிர்வு
குறித்து விமர்சனம் செய்துவருகிறார்கள்.
அந்த அல்வாவில், ‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி
ஜீரோ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் போடுவதற்கு அல்வா கிண்டும் சடங்கு நடைபெறுவது
வழக்கம். அந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு கிடைத்திருப்பது அல்வா மட்டும் என்று கூறும்
வகையில் அல்வா போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் கைது செய்ய
வேண்டும் என்று பா.ஜ.க.வினர் ரகளை செய்துவருகிறார்கள்.