News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

கூட்டணிக் கட்சிகளாக மாறிய பிறகும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இணைந்து செயல்படவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில், நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அவருடன் காந்தி எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொண்டார்.

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையடுத்து சட்டமன்றத்தில் இரண்டு கட்சிகளும் இணைந்து ஸ்டாலின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தி.மு.க. அரசுக்கு எதிராக நடப்பு கூட்டத்தொடரில் முக்கியமான சில விஷயங்களை எழுப்பவும் கூட்டாக வெளிநடப்பு உள்ளிட்ட நிகழ்வுகளைத் திட்டமிடவும் ஆலோசனை செய்துள்ளனர். இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படத் தொடங்கினல் மட்டுமே தொண்டர்களிடம் நெருக்கம் அதிகரிக்கும் என்பதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தமிழகத்தின் கூட்டணித் தலைமை என்பதால் எடப்பாடி பழனிசாமியை தேடிச்சென்று நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார். அண்ணாமலை தலைவராக இருந்தால் இப்படி ஒரு இணக்கம் வந்திருக்காது என்று இரண்டு கட்சியினரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் நிலையில், வலிமையான எதிர்க்கூட்டணி உறுதியாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link