News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நாய்கறி விவகாரம் குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதியை, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்களே அங்கே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை விரட்டி அனுப்பி விட்டதாகவும், அப்படியானால் உப்பு போட்டு உண்ணும் தமிழர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஆர்.எஸ்.பாரதிக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து தன் பங்கிற்கு பதில் அளித்தார். நாகா இன மக்கள் துணிச்சலும், நேர்மையும் மிக்கவர்கள் என்ற அவர்,  கண்ணியமான அம்மக்களை, நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவது ஏற்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஆர்.எஸ் பாரதி, “கவுகாத்தி நீதிமன்றமே நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பவர்கள்தான்’’ எனக் கூறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், நாய்கறி விவகாரம் குறித்து முதல்முறையாக நாகாலாந்து ஆளுநரான இல.கணேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இல.கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஒட்டுமொத்த நாகாலாந்து மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் போல ஆர்.எஸ்.பாரதி சித்தரிப்பதா? உணவுத் தேர்வு அவரவர் தனிப்பட்ட விருப்பம். உணவுப் பழக்கத்தை வைத்து ஒருவரின் குணாதிசயத்தைத் தீர்மானிக்க முடியாது’’ என்று மிகவும் காட்டமாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை நாகாலாந்து மக்கள் துரத்தி அனுப்பியதாக ஆர்.எஸ்.பாரதி கூறியது உண்மைக்குப் புறம்பான தகவல். மாறாக ஆர்.என்.ரவி மீது நாகாலாந்து மக்கள் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டின் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு உள்ளதாக கூறியுள்ள அவர் நாகாலாந்து ஆளுநராக, தான் இதற்கு கண்டனம் தெரிவிப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ் பாரதியின் கருத்தை  புறந்தள்ளுமாறு நாகாலாந்து மக்களைக் கேட்டுக்கொண்ட இல.கணேசன், ஆர்.எஸ். பாரதியின் பேச்சு, தமிழக மக்களின் குரல் அல்ல எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link