Share via:
கலைஞர் கருணாநிதியை அவமானப்படுத்தும் வகையில் முத்தமிழ் பேரறிஞர்
என்ற பட்டத்தை வைரமுத்து ஏற்கக்கூடாது என்று தி.மு.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
சுப.வீரபாண்டியன் வைரமுத்துக்கு நேரடியாகவே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இந்த நிலையில், முத்தமிழ் பேரறிஞர் என்ற பட்டத்தை முத்தமிழ் பெருங்கவிஞர்
என்று மாறுதல் செய்து பெற்றுக்கொண்டுள்ளார் வைரமுத்து. இதுகுறித்து வைரமுத்து, ‘’பொன்விழாக்
காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்ற பட்டத்தை எனக்கு
வழங்கியது அமைச்சர் தங்கம் தென்னரசு பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார்.
தமிழ் இசைச் சங்கத் தலைவர்
ஏ.சி.முத்தையா, திருமதி தேவகி முத்தையா, பொற்கிழி பெற்ற விசாகா ஹரி, மற்றும் அறங்காவலர்கள்
உடனிருந்தனர் தமிழ் இசையை மீட்டுக்கொடுத்த செட்டி நாட்டரசர் பாரம்பரியத்தைப் போற்றிச்
சொன்னேன் இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன்’’ என்று அறிவித்டிருக்கிறார்.
இப்போது தான் வைரமுத்துக்கு தி.மு.க.வினர் பாராட்டு தெரிவிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள். தி.மு.க.வினர் இப்போது, ‘’வைரமுத்துவுக்கு மதுரைத் தமிழ் இசைச்
சங்கம் “முத்தமிழ் பேரறிஞர்” என்ற பட்டத்தை வழங்குவதாக அறிவித்ததும் நாம்
தமிழர் கட்சியினர் வரவேற்று பதிவிட்டனர். அதற்கு காரணம் வைரமுத்து மீதான அன்பு மட்டுமல்ல,
கலைஞர் மீதான வெறுப்பு.
“முத்தமிழ் அறிஞர்” என கலைஞர் அவர்களை உலகத்தமிழர்கள்
அழைக்கும் நிலையில், அந்த புகழை சிதைக்கும் வகையில் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட
“முத்தமிழ் பேரறிஞர்” என்ற பட்டம் இருக்கும் என நாம் தமிழர் கட்சியினர் விரும்பினர்.
அதேநேரத்தில் இந்த பட்டத்தை வைரமுத்து பெற வேண்டாமே என கலைஞரின் விசுவாசிகள் எண்ணினர்.
கலைஞர் மீது பேரன்பு கொண்ட
கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் மீது அளவற்ற அன்பு கொண்டோரின் வேண்டுகோளை ஏற்று,
“முத்தமிழ் பேரறிஞர்” என்ற பட்டத்தை நிராகரித்து “முத்தமிழ்ப் பெருங்கவிஞர்”
என்ற பட்டமாக மாற்றி பெற்றுக்கொண்டார். கலைஞர் புகழுக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த
முடியாதா? என நினைத்து செயல்படும் நாம் தமிழர் கட்சியினரின் கேடுகெட்ட எண்ணத்தில் கரியை
பூசியுள்ளார்’’ என்று பாராட்டியுள்ளனர்