News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவில் ஆதவ் அர்ஜூனை  துணைப்பொதுச் செயலாளராக திருமாவளவன் நியமனம் செய்திருக்கிறார். 10 கோடி ரூபாய்க்கு எம்.பி. சீட் விற்பனை செய்துவிட்டதாக திருமாவளவன் மீது சிறுத்தைகள் கோபத்தைக் காட்டி வருகிறார்கள். .

லாட்டரி சீட் விற்பனையாளர் மார்ட்டினின் மருமகனே ஆதவ் அர்ஜுனா. இவர் கடந்த 27.1.2024 அன்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையவே செய்தார். அப்படி இணைந்தவருக்கு ஒரு மாதம் ஆவதற்கு முன்னரே 15.2.22024 அன்று நேரடியாக துணை பொதுச் செயலாளராக பதவி கிடைத்திருக்கிறது.

வரயிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி.க்கு நிற்பதற்காகவே இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் திருமாவளவனுக்கு ஆதவ் கொடுத்திருக்கிறார் என்றும் அவரது கட்சியினரே ஆதங்கத்துடன் பேசி வருகிறார்கள்.

ஆதவ் அர்ஜூனின் மனைவி பா.ஜ.க. கட்சியில் உறுப்பினராக இருக்கிறார் என்பதும் மார்ட்டின் தி.மு.க.வில் இருக்கிறார் என்பதும் வெளியே தெரியாத விஷயம். தங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக சகல கட்சியிலும் இருக்கும் நபர்கள், எம்.பி. ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் 2 தனித் தொகுதிகளும் 1 பொதுத் தொகுதியும் கேட்டு வருகிறார்கள் சிறுத்தைகள். இந்த பேச்சுவார்த்தை முடிவில் ஒரு தனித் தொகுதியும் ஒரு பொதுத் தொகுதியும் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது. அதன்படி வரும் தேர்தலில் திருமாவும் ஆதவ் அர்ஜூன் மட்டுமே போட்டியிடுவார்கள்.

இந்த முறை ரவிக்குமாருக்கு சீட் கிடையாது. கட்சியில் இத்தனை ஆண்டுகள் உழைத்தவர்களுக்கும் சீட் கிடையாது. மற்ற கட்சிக்கும் திருமாவின் விடுதலை சிறுத்தைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இங்கேயும் பணம் கொடுத்தால் காரியங்கள் நடக்கும் என்ற நிலையாகிவிட்டது.

இந்த லட்சணத்தில் இவர்கள் பா.ஜ.க.வில் கிரிமினல்கள் சேர்கிறார்கள், பணம் கொடுப்பவர்களுக்கு பதவி கிடைக்கிறது என்றெல்லாம் விமர்சனம் செய்வது ரொம்பவே அவமானம் என்று சிறுத்தைகள் வேதனைப்படுகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link